மம்தா இல்லாத இந்தியா கூட்டணி.. கைநழுவுகிறதா மேற்கு வங்கம்?

x

மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி இல்லை என்றும், தனித்து போட்டி என்றும் ம‌ம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இது குறித்து அசாம் மாநிலம் பார்பெட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மம்தா பானர்ஜி இல்லாத இந்தியா கூட்டணியை கற்பனை செய்து பார்க்க முடியாது என்று கூறினார். பாஜகவை தோற்கடிக்க விரும்புவதால், இந்தியா கூட்டணி எதையும் செய்வோம் என்று மம்தா பானர்ஜி கூறியிருந்த‌தாக அவர் குறிப்பிட்டார். மம்தாவும் திரிணாமுல் காங்கிரசும், இந்தியா கூட்டணியின் வலுவான தூண்கள் என்று ராகுல் காந்தி தெளிவாக கூறியுள்ளதாகவும், மேற்கு வங்கத்தில் ஒரே கூட்டணியாக போரோடுவோம் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த‌தாகவும், ஜெய்ராம் ர‌மேஷ் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்