இந்தியாவுக்கு ரஷ்யா செய்த உதவி.. கடுப்பில் உலக நாடுகள் - காரணம் என்ன?
உலகின் அதிநவீன வான் பாதுகாப்பாக சாதனமாக ரஷ்யாவின் எஸ் - 400 ஏவுகணை தொகுப்பு கருதப்படுகிறது. ஏவுகணைகள் 400 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் வரும் எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை அழிக்கும் வல்லமை கொண்டது. ரஷ்யாவிடம் இருந்து 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 5 ஏவுகணை கட்டமைப்பை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதில் 3 பாதுகாப்பு கட்டமைப்பு இந்தியாவிற்கு வந்துவிட்டது. இப்போது எஸ் - 400 ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை விமானப்படை பரிசோதித்து பார்த்த போது, 80 % எதிரிகள் விமானங்கள், ஏவுகணைகளை வானிலையே சுட்டு தகர்த்திருப்பதாக விமானப்படை தகவல்கள் வெளியாகியுள்ளன. மீத விமானங்கள் இந்திய எல்லைக்குள் இலக்குகளை தாக்காமல் திரும்பி சென்றுவிட்டது என்றும் வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய வான் கட்டமைப்பில் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.