``ப்ளடி கிரிமினல் உடன்... ஜனநாயக தேசத்தின் தலைவர்..'' பெரும் அதிர்வலைகளை கிளப்பிய ஜெலன்ஸ்கி

x

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் முடிவில்லாமல் செல்லும் வேளையில், பிரதமர் மோடி இருநாள் பயணமாக ரஷ்யா சென்றார். பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புதின் அவரது மாளிகையில் இன்முகத்தோடு வரவேற்றார். இதற்கிடையே ரஷ்யாவின் கொடூரமான தாக்குதலால் உக்ரைனில் புற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகள் உள்பட 37 பேர் உயிரிழந்து இருப்பதாக எக்ஸ் தளத்தில் தகவல் வெளியிட்டிருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மோடி - புதின் சந்திப்பு குறித்த அதிருப்தியை பதிவிட்டுள்ளார். இதுபோன்ற கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்ட நாளில் உலகின் மிப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், புதின் உலகின் மிகவும் மோசமான கிரிமினலை ஆரத்தழுவியிருப்பது மிகப்பெரிய ஏமாற்றமளிக்கிறது எனவும் இது அமைதி முயற்சிகளுக்கு அழிவுகரமான பின்னடைவு எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்