எதிர்க்கட்சி கூட்டணியின் "இந்தியா" என்ற பெயர்.. தடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு

x

"இந்தியா" என்ற பெயரை எதிர்க்கட்சிகளின் கூட்டணி பயன்படுத்துவதை தடுக்க கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. டெல்லியை சேர்ந்த ரோஹித் கேரிவால் தாக்கல் செய்த பொது நல மனு உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல், தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம் இது விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது, விசாரணைக்கு ஏற்க முடியாது என தெரிவித்து, மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்தது.


Next Story

மேலும் செய்திகள்