இந்தியா கூட்டணி-ஒருங்கிணைப்பு குழு கூட்டம்...வெளியான முக்கிய தகவல் | INDIA Alliance | T.R.Balu

x

டெல்லியில் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் சரத் பவார் இல்லத்தில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து திமுக மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி தவிர அனைவரும் பங்கேற்றதாக கூறினார்.

தேர்தலுக்கான, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இது குறித்து மாநில வாரியாக கட்சிகள் ஆலோசனை செய்து வேட்பாளர்களை இறுதி செய்வார்கள் என்றார். இந்தியா கூட்டணியின் முதல் பொதுக் கூட்டம் அக்டோபர் முதல் வாரம் போபாலில் நடைபெற உள்ளது என்றும் பொதுக்கூட்டங்களில் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும், திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார். போபால் பாட்னா நாக்பூர் கவ்காதி சென்னையில் பொது கூட்டம் நடத்த இந்திய கூட்டணி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது என டி.ஆர்.பாலு கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்