பாஜகவினர் இரு சக்கர வாகனத்தில் பேரணி - தடுத்து நிறுத்திய போலீசார்.. - திருச்சியில் பரபரப்பு..

x

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திருச்சியில் இன்று,

பாஜக இளைஞரணி சார்பில் இரு சக்கர வாகனத்தில்

பேரணியாக செல்வதற்கு திட்டமிடப்பட்டது. இதற்கு

மாநகர காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இந்நிலையில்

பாஜக மாநில இளைஞரணி செயலாளர் ரமேஷ் சிவா

உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், தங்களது இருசக்கர

வாகனங்களில் திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில்

இருந்து தேசியக் கொடியுடன் கிளம்பினர். அரசு

மருத்துவமனை, எம்ஜிஆர் சிலை வழியாக இரு சக்கர

வாகனத்தில் சென்று, மீண்டும் பாஜக அலுவலகத்திற்கு

திரும்பினர்.


Next Story

மேலும் செய்திகள்