வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு.. மீண்டும் கூடுகிறது I.N.D.I.A. கூட்டணி

x

எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியின் மூன்றாவது கட்ட ஆலோசனையின் முதல் நாள் கூட்டம் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில், சோனியா காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ல‌ல்லு பிரசாத் யாதவ், ம‌ம்தா பானர்ஜி, நிதீஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான், ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மொத்தமாக 28 கட்சிகளைச் சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் கமிட்டி அமைப்பது, தொகுதி பங்கீடு, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்கான வியூகங்கள் குறித்து விவாதித்த‌தாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே சார்பில் இரவு விருந்து வைக்கப்பட்டது. கடந்த கூட்டத்தில், கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டப்பட்ட நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், கூட்டணிக்கான லோகோ வெளியிடப்படும் என தெரிகிறது. அடுத்த கூட்டம் தமிழ்நாட்டில் நடத்துவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்