ரெகுலர் பணிக்கு ஆசிரியர்கள் திரும்ப உத்தரவு? - தேர்வான 8,000 பேருக்கு நெக்ஸ்ட் பிளான்

x

அனைவருக்கும் கல்வி வழங்கும் வகையில், தி.மு.க அரசு கடந்த 2021-ம் ஆண்டு பொறுப்பேற்றவுடன், இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளிகளுக்கு வர முடியாத மாணவ, மாணவிகளுக்கு இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களுக்கு கல்வியை கற்றுத் தருவதே இத்திட்டத்தின் நோக்கம். இதற்காக தமிழக அரசு ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, ஒரு சில குறிப்பிட்ட கிராமங்களில் மட்டும் செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இத்திட்டத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், மீண்டும் தங்கள் பணியிடங்களுக்கே திரும்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்திட்டத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 8 ஆயிரம் பேரை, கல்வி மேலாண்மை தகவல் முகமை எமிஸ் பணிகளுக்கு பயன்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்