"பெட்ரோல்- டீசல் விலையை தமிழக அரசு குறைக்காவிட்டால் உண்ணாவிரத போராட்டம்" - அண்ணாமலை
பெட்ரோல்- டீசல் விலையை தமிழக அரசு குறைக்காவிட்டால் பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெட்ரோல்- டீசல் விலையை குறைக்ககோரி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம்அருகே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் ஹெச். ராஜா, கரு.நாகராஜன் உள்ளிட்டோரும் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.மேடையில் பேசிய அண்ணாமலை கஞ்சாவின் தலை நகரமாக தமிழகம் மாறி வருவதாகவும், கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார். பின்னர்கோட்டையை நோக்கி முற்றுகையிட பேரணியாக சென்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை , பெட்ரோல் டீசல் விலையை தமிழக அரசு குறைக்காவிட்டால் 20 நாட்களுக்கு பிறகுமாநிலம் முழுவதும் பாஜக சார்பில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என்றார்.