"மீண்டும் நிலம் கையகப்படுத்தப்பட்டால்..." - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை

x

என்.எல்.சி விரிவாக்கத்திற்காக மீண்டும் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், மக்கள் புரட்சி வெடிக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர், விளைநிலங்கள் கையகப்படுத்தலுக்கு எதிராக போராட்டங்கள் தொடரும் நிலையில், மீண்டும் சுரங்க விரிவாக்கத்திற்கு நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது கண்டித்தக்கது என தெரிவித்துள்ளார். மத்திய அரசே கடும் நெருக்கடி கொடுத்தாலும், நிலங்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என அவர் கூறியுள்ளார். மக்களின் பொறுமைக்கு எல்லை உண்டு, அது கடந்தால் மக்கள் புரட்சி வெடிக்கும் எனவும், அதனை உணர்ந்து நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்