நாட்டில் ஸ்திரதன்மையை சீர்குலைக்க சதி - பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு

x

நாட்டில் ஸ்திரதன்மையை சீர்குலைக்கவும், பொருளாதார அராஜகத்தை ஏற்படுத்தவும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சதி செய்வதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

செபி தலைவர் மாதவி குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்டிருக்கும் அறிக்கை புயலை கிளப்பியிருக்கிறது. இதில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில் டெல்லி பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், நாட்டின் ஸ்திரதன்மையை சீர்குலைக்கவும் பொருளாதார அராஜகத்தை ஏற்படுத்தவும் காங்கிரஸ், அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் அதன் டூல்கிட்கள் ஒன்றிணைந்து சதி செய்வதாக குற்றம் சாட்டினார்.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது பங்குசந்தை சரியும் என பேசப்பட்டது என்ற ரவிசங்கர் பிரசாத், ஆனால் இந்தியாவும் பாதுகாப்பாக இருக்கிறது, அதன் பங்குசந்தையும் பாதுகாப்பாக இருக்கிறது என குறிப்பிட்டார்.

ஹிண்டன்பர்கின் முந்தைய குற்றச்சாட்டுகளுக்கு உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நடத்தப்பட்ட விசாரணையில் ஜூலையில் செபி அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்க தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

பதிலளிக்க முடியாத ஹிண்டன்பர்க் ஆதாரமற்ற இத்தகைய தாக்குதலை தொடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

நாட்டின் ஒவ்வொரு சாதனையும் அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டியவர்,ஹிண்டன்பர்க் ஜார்ஜ் சோரசால் முதலீடு செய்யப்பட்டது, தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக தவறான பிரசாரத்தை செய்கிறது, மோடி அரசு அரசை அகற்ற வேண்டும் என்பதுதான் ஜார்ஜ் சோரஸ் எண்ணம் எனவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்