ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்கப் போவது யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை
ஹரியானா, ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறுகிறது.90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் அக்டோபர் 5இல் நடைபெற்ற தேர்தலில் 67.90 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இம்முறை காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.மொத்த வாக்காளா்கள் கிட்டத்தட்ட 88 லட்சம் போ் என்ற நிலையில், மூன்று கட்டங்களிலும் சோ்த்து 63. 88 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. அங்கு, தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கூட்டணி அதிகப்படியான இடங்களில் வெற்றிபெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.மத்திய ஆயுதப் படையினர், மாநில ஆயுதப் படைக் காவல் துறையினர், மாவட்ட காவல் துறையினர் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.