ஜி 20 மாநாடு... பாரத் மண்டபத்தில் தேங்கிய நீர் - கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்
டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற்ற பாரத் மண்டபத்தில், தண்ணீர் தேங்கியது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. டெல்லியில் இரவிலிருந்து அதிகாலை வரை பெய்த மழையின் காரணமாக, பாரத் மண்டபத்தின் ஒரு பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ் கட்சி தனது X தளத்தில், 2 ஆயிரத்து 700 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட பாரத் மண்டபத்தில், ஒரு மழைக்கே தண்ணீர் நிற்பதாக விமர்சித்துள்ளது. மேலும், பாஜக அரசின் வளர்ச்சி என்ற வெற்று பிம்பம் அம்பலமாகிவிட்டதாகவும் காங்கிரஸ் சாடியுள்ளது.
Next Story