ஜி 20 மாநாட்டிற்கு இத்தனை கோடி செலவா? - மத்திய அரசு சொன்ன தகவல்
ஜி 20 உச்சி மாநாட்டிற்கு செலவு செய்யப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற 2 நாள் ஜி 20 உச்சி மாநாட்டிற்கு 4 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மத்திய அரசு செலவு செய்ததாகவும் ஒதுக்கப்பட்ட 990 கோடி ரூபாயை விட, 300 மடங்கு அதிகமாக செலவு செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, இவ்வாறு பரவும் தகவல் தவறானது என தெரிவித்துள்ளது. நாலாயிரத்து நூறு கோடி ரூபாய் என்பது ஜி 20 உச்சி மாநாட்டை நடத்த தரம் உயர்த்தப்பட்ட சர்வதேச வர்த்தக மையம், நிரந்தர கட்டமைப்பு மற்றும் பிற கட்டுமான பணிகளை மேற்கொள்ள செலவு செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது. ஜி-20 உச்சி மாநாட்டை நடத்துவதற்காக மட்டும் இவ்வளவு தொகை செலவிடப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Next Story