மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு வைக்க நினைத்த 'Full Stop'..நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறுத்த உத்தரவிடக்கோரிய பொதுநல மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, தமிழ்நாடு அரசு 7 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்து வரும் நிலையில், மகளிர் உரிமை தொகை திட்டத்தால் மாநில பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாதத்தை நிராகரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறுத்த உத்தரவிடக்கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Next Story