“உலக நாடுகளே கண்டு வியக்கும் இந்தியா“ - நிர்மலா சீதாராமன் பெருமிதம்
நாட்டில் ஜிஎஸ்டி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை முன்பை விட அதிகம் என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை எம்.ஆர்.சி நகரில் ரெவென்யு பார் அசோசியேசன் சார்பாக ( வருவாய் வழக்கறிஞர்கள் சங்கம் ) நடைபெற்ற கருத்தரங்கத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் டிஜிட்டல் புரட்சியை கண்டு உலக நாடுகளே வியக்கிறது என்றார்.
AI தொழில்நுட்ப வளர்ச்சியை அனைவரும் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் கூறினார்.
நாட்டில் ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கை 1.74 கோடியாக உள்ளது என்றும்,
114 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் 1.74 கோடி பேர் மட்டுமே ஜிஎஸ்டி வரி செலுத்துவது குறைவாக தோணலாம்,
ஆனால் இது முன்பை விட அதிகம் என்பது தான் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
அதேபோல், நேரடியாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் 3.91 கோடியில் இருந்து 7.79 கோடி உயர்ந்து இருக்கிறது என கூறிய அவர்,
வரி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக நிர்மலதா சீதாராமன் தெரிவித்தார்.