தென் தமிழகத்தில் வெற்றி வாகை சூடப்போகும் அந்த 9 பேர் இவர்களா?தந்தி டிவி சர்வேயில் சுவாரஸ்ய முடிவு

x

தென் தமிழகத்தில் வெற்றி வாகை

சூடப்போகும் அந்த 9 பேர் இவர்களா?

தந்தி டிவி மெகா சர்வேயில் சுவாரஸ்ய முடிவு

தென் மாவட்டங்களில் உள்ள 9 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில் விரிவாக காணலாம்...

மதுரையில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் 35 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் சரவணன் 29 சதவீத வாக்குகளையும், பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் 23 சதவீத வாக்குகளையும் பெற்று வெற்றி வாய்ப்பை தட்டிச் செல்வார் என தந்தி டிவி கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

தேனியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 35 சதவீத வாக்குகளையும், அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் 31 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் 21 சதவீத வாக்குகளையும் பெற வாய்ப்பிருப்பதாகவும், டிடிவி தினகரன் கடும் போட்டியை கொடுத்தாலும், வெற்றியை தங்க தமிழ்செல்வன் தட்டிச் செல்வார் எனவும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது...

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 36 சதவீதம் வாக்குகளையும், தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகர் 32 சதவீத வாக்குகளையும், பாஜகவில் ராதிகா சரத்குமார் 21 சதவீத வாக்குகளையும் பெற கூடும் என்றும், இந்த தொகுதியில் சிட்டிங் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.

சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 38 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 30 சதவீத வாக்குகளையும், பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 23 சதவீத வாக்குகளையும் பெறலாம், வெற்றியை கார்த்தி சிதம்பரமே தட்டிச் செல்ல வாய்ப்பிருக்கிறது என தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவு காட்டுகிறது..

ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனிக்கு 35 சதவீத வாக்குகளும், பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஓபிஎஸ்க்கு 33 சதவீத வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளுக்கு 22 சதவீத வாக்குகளும் கிடைக்கலாம், வெற்றியை வசமாக்க நவாஸ் கனியும், ஒபிஎஸ்சும் மல்லுக்கட்டுவார்கள் என்றே கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி, 44 சதவீத வாக்குகளுடன் வெற்றியை வசமாக்க வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29 சதவீத வாக்குகளை பெறலாம் எனவும் தெரிகிறது.

தென்காசியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 37 சதவீத வாக்குகளையும், அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி 31 சதவீத வாக்குகளையும், பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் 22 சதவீத வாக்குகளையும் பெற கூடும் என்றும், அதில் திமுக வேட்பாளர் ராணிக்கே வெற்றி என கருத்துக்கணிப்பு முடிவு காட்டுகிறது.

கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 40 சதவீத வாக்குகளையும், பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 34 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் 16 சதவீத வாக்குகளையும் பெறலாம், வெற்றி, சிட்டிங் எம்.பி. விஜய் வசத்திற்கே என கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

இதே தொகுதியில் உள்ள விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 47 சதவீத வாக்குகளையும், பாஜக வேட்பாளர் வி.எஸ். நந்தினி 28 சதவீத வாக்குகளையும், பெறலாம், வெற்றி தாரகைக்கே என தெரிகிறது.

திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 35 சதவீத வாக்குகளையும், பாஜக நயினார் நாகேந்திரன் 34 சதவீத வாக்குகளையும் அதிமுகவின் ஜான்சி ராணி 21 சதவீத வாக்குகளையும் பெற வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது.

தொகுதியில் வெற்றியை வசமாக்க ராபர்ட் புரூஸ், நயினார் நாகேந்திரன் இருவரும் மல்லுக்கட்டுவதால், கருத்துக்கணிப்பில் கடும் இழுபறி தொகுதிகள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது திருநெல்வேலி...

தென் மண்டலத்தில் ராமநாதபுரம், தேனி தொகுதிகளில் கடும் போட்டியில் திமுக வெற்றிப்பெற வாய்ப்பிருப்பதாகவும், திருநெல்வேலி தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கிறது என்பதையும் தந்தி டிவியின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன...



Next Story

மேலும் செய்திகள்