"எங்களை பாத்து அச்சப்படுறாங்க"..பரபரப்பாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் | ADMK | Jayakumar

x

அதிமுக - பா.ஜ.க கூட்டணி முறிவால் திமுக கூட்டணி ஆட்டம் கண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சிறுபான்மை நலப்பிரிவு ஆலோசனை கூட்டத்தில், சிறுபான்மை மக்களின் கோரிக்கையை ஏற்று பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதாக நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி கட்சிகள் அதிமுகவிடம் வந்துவிடுமோ என திமுக அச்சத்தில் உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்