சந்திரபாபு நாயுடுவுக்கு ஈபிஎஸ் கடும் அழுத்தம் | EPS | Chandrababu Naidu

x

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலாற்றின்

குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் அனுமதியின்றி தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

முல்லைப் பெரியாறு, காவிரி-மேகதாது, பாலாறு என தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாலாற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை ஆந்திர முதல்வர் கைவிட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்