"கொத்தையம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை" -ஈபிஎஸ்ஸிடம் மனு கொடுத்த விவசாயிகள்..

x

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற அதிமுக தொண்டர் இல்ல திருமண விழாவில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது அங்கு வந்த ஒட்டன்சத்திரம் வாழ் விவசாயிகள் இங்கு சிப்காட் தொழிற்பேட்டை கொண்டு வந்தால், விவசாயிகளும் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர். மேலும்,

கொத்தையம் கிராம பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை கொண்டு வரக்கூடாது என்றும், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் மனு அளித்தனர்


Next Story

மேலும் செய்திகள்