"இதை செய்ததால் தான் EPS தோல்வி அடைந்தார்"...டிடிவி.தினகரன் விமர்சனம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன்,
எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மை மக்களின் தோழனாக வேஷம் போட்டுக்கொண்டிருப்பதாக விமர்சித்தார்.10.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்து ஏமாற்றியதால் தான், தேர்தலில் தோல்வியை சந்தித்தார் என்றும், அவருடைய சுயரூபத்தையும், மக்கள் தெரிந்து அவரை புறந்தள்ளிவிட்டதாக கூறினார். எடப்பாடியின் தவறான செயல்களால் தென்தமிழ்நாட்டில் பல்வேறு சமுதாய மக்கள், அவருக்கு எதிராக மாறிவிட்டதால், தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்திப்பார் என விமர்சித்தார்.
Next Story