"போயும் போயும் இதுக்காக... திமுக-விடம் சரண்டர் ஆன ஈபிஎஸ்.." - ஓபிஎஸ் ஆவேசம்

x

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையில், எடப்பாடி பழனிசாமி திமுகவின் ஊதுகுழலாக செயல்படுவதாக, முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், எடப்பாடி பழனிசாமி சுயநலத்திற்காக திமுகவிடம் சரணடைந்து விட்டதாகவும், கட்சியின் தனித்தன்மையை தாரைவார்த்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் ஈபிஎஸ்-ன் துரோகக் கூட்டம் நான்காவது இடத்திற்கு துரத்தி அடிக்கப்படும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்