"அடுத்து நமது ஆட்சிதான்..!" சிரித்துக்கொண்டே ஈபிஎஸ் சொன்ன பதில்

x

மனு அளிக்க வந்த பட்டதாரி ஆசிரியர் ஒருவர், அடுத்த நம்ம ஆட்சிதான் என கூற, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சியான 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, நாளை நடைபெறும் நியமன தேர்வில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் பட்டதாரி ஆசிரியர்கள் இன்று நேரில் மனு அளித்தனர். நாளை நியமன தேர்வு நடைபெறும் நிலையில், அதனை நிறுத்த வேண்டும் அல்லது, பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனி நியமன தேர்வை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது, நாளை தேர்வு வைத்துக் கொண்டு, இன்று மனு அளிக்கிறீர்களே என ஈபிஎஸ் கேள்வி எழுப்பினார். அப்போது, அடுத்தது நம்ம ஆட்சிதான் என ஆசிரியர் ஒருவர் கூறினார். அதற்கு சிரித்துக்கொண்ட பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சி வருவதற்குள், தேர்வு எழுதி வேலைக்கு சென்றுவிடுவீர்கள் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்