"மக்களின் சொந்த வீடு கனவை நீர்த்து போக செய்யாதீர்கள்" - அரசுக்கு ஈபிஎஸ் கடும் கண்டனம்

x

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மூன்று முறை மின் கட்டணம் உயர்வு, இரு மடங்கு சொத்து வரி மற்றும் வீட்டு வரி உயர்வு, பல மடங்கு பதிவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சூழலில் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை திமுக அரசு வானளாவ உயர்த்தியுள்ளதாக கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, மக்களின் சொந்த வீடு கனவு நீர்த்து போகச் செய்துள்ளதாக கூறியுள்ளார். பஞ்சாயத்து முதல் மாநகராட்சி வரை, 1000 சதுர அடிக்கு 22 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை வரைபடக் கட்டணம் செலுத்தும் நிலை உருவாகி உள்ளதாகவும் ஏழை மக்களின் நலனை கருத்திக் கொண்டு உயர்த்தப்பட்ட வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்