"கடும் அராஜகத்தின் உச்சம் .." -எக்ஸ் தளத்தில் வெடித்த இபிஎஸ்
மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் நிர்வாக
சீர்கேட்டையும், முறைகேடுகளையும் வீடியோவாக
வெளியிட்ட ஆவின் ஊழியரை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது, கடும் அராஜகத்தின் உச்சம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், உடனடியாக தவறை சுட்டிக் காட்டிய நிறுவன ஊழியரை மீண்டும்
பணி அமர்த்தவும், தவறிழைத்தவர்கள் மீது கடும்
நடவடிக்கை எடுக்கவும் தி.மு.க. அரசை வலியுறுத்தியுள்ளார்.
Next Story