வேட்பு மனு தாக்கல் செய்ய கிரெடிட் கார்டு உடன் வந்த வேட்பாளர் - அதிர்ந்துபோன ஆட்சியர் ..

x

மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்...

அந்த வகையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர் ராஜேந்திரன் என்பவர், டெபாசிட் தொகை செலுத்த கிரெடிட் கார்டு கொண்டு வந்ததால் பரபரப்பானது.

கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீசபாண்டியன், அம்பேத்கர், திருவள்ளுவர், வேலு நாச்சியார் உள்ளிட்ட வேடமணிந்த கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்தார்.

மதுரை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் சங்கர பாண்டியன், ஓட்டுக்கு பணம் பெறுவது தற்கொலைக்கு சமம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூக்குக் கயிறுடன் டம்மி ரூபாய் நோட்டுகளை இணைத்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதேபோல, தாக்கம் என்ற கட்சி சார்பில் கன்னியாகுமரி தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த கீதா என்ற பெண், மாநிலம் முழுவதும் 130 பேரை அங்கமாக கொண்ட தங்கள் கட்சி சார்பில் 6 பேர் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்