"பாரபட்சம் பார்க்கும் தேர்தல் ஆணையம்" - MLA சரமாரி கேள்வி
அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுவதாக நாகை எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் கருத்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பம்பரம் சின்னம் கேட்ட மதிமுகவுக்கு 2 தொகுதியில் போட்டியிட்டால் தருவோம் என்றும் விசிக பானை சின்னம் கேட்டால் ஒரு சதவீதம் வாக்கு வேண்டும் என்றும் ஆணையம் கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். பானை சின்னத்தில் 1 எம்பி, 4 எம்எல்ஏ உள்ளது போல், குக்கர், சைக்கிளில் எத்தனை எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளனர் என ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story