“தேர்தல் முடிவில் தாமதம்..“ - காங். ஜெயராம் ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு
தேர்தல் முடிவுகள் குறித்த துல்லியமான தரவுகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யப்படவில்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு மனு ஒன்றை அவர் அளித்துள்ளார். அந்த மனுவில் காலை 9 மணி முதல் 11 மணி வரை அரியானா தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததில் விவரிக்க முடியாத தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். முடிவுகளை புதுப்பிப்பதில் காணப்பட்ட மந்தநிலை, தேர்தல் செயல்முறையை குறைமதிப்பிற்கு அனுமதிக்கிறது என்றும் தவறான நோக்கம் கொண்டவர்கள் இதை பயன்படுத்தக்கூடும் என அச்சப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Next Story