வாக்கு சதவீதத்தில் குளறுபடி? .."17C ஃபார்மை அப்லோட் பண்ண முடியாது'' - தேர்தல் ஆணையம் பரபரப்பு பதில்

x

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையைப் பதிவு செய்யும் 17-சி படிவத்தை இணையத்தில் பதிவேற்று சாத்தியமில்லை எனத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்மனுத் தாக்கல் செய்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் சட்டப்பிரிவு இயக்குனர் விஜய்குமார் பாண்டே தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், மனுதாரர் புதிய சந்தேகங்களை எழுப்பி வாக்களர்களை குழுப்ப நினைப்பதாகவும், பல்வேறு சரிபார்ப்புகளுக்கு பின்னரை வாக்குசதவீதம் இறுதிசெய்யப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு தரவுகள் அடங்கிய 17சி படிவத்தை இணையத்தில் பதிவேற்றினாால் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்