5ஆம் கட்ட மக்களவை தேர்தல்.. தயார் நிலையில் 49 தொகுதிகள் - வாக்களிக்க ரெடியான மக்கள்
இன்று நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலின் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
பீகார், ஜம்மு-காஷ்மீர், லடாக், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் ஐந்தாம் கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.
ஒடிசாவில் 35 சட்டமன்றத் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. 5-ம் கட்ட தேர்தலுக்காக 94 ஆயிரத்து 732 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 9.47 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 8.95 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். 2 ஆயிரம் பறக்கும் படை, 2 ஆயிரத்து 105 நிலையான கண்காணிப்புக் குழு, 881 வீடியோ கண்காணிப்புக் குழு, தேர்தல் பணிகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.