5-ஆம் கட்ட தேர்தல் - வாக்கு சதவீதம் எவ்வளவு? விவரங்களை வெளியிட்ட ECI
ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலில், இரவு 11.30 மணி நிலவரப்படி, தோராயமாக 60.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 மக்களவைத் தொகுதிகளில், 5-ஆம் கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான மொத்த வாக்குகளின் விவரங்களை மாநிலம் வாரியாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்தில் 74.65 விழுக்காடு வாக்குகளும், லடாக்கில் 69.62 விழுக்காடு வாக்குகளும், ஒடிசாவில் 67.59 விழுக்காடு வாக்குகளும், ஜார்க்கண்டில் 63.07 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. இதே போன்று, உத்தர பிரதேசத்தில் 57.79 சதவீத வாக்குகளும், காஷ்மீரில் 56.73 விழுக்காடும், பீகாரில் 54.85 விழுக்காடும், மகாராஷ்டிராவில் 54.29 விழுக்காடும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, ஐந்தாம் கட்ட தேர்தலில் 60.09 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா தொகுதியில், கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வாக்குப்பதிவும், அமைதியாகவும் தேர்தல் நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.