10 மாநிலம்.. 96 தொகுதிகள் - இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்
மக்களவை தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. 10 மாநிலங்களில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (மே.13) மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆந்திராவில் 25 தொகுதியில், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள் , பீகாரில் 5 தொகுதிகள், ஜார்க்கண்ட்டில் 4 தொகுதிகள், ஒடிசாவில் 4 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 13 தொகுதிகள் உள்பட 96 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நான்காம் கட்ட தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹூவா மொய்த்ரா, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய் எஸ் ஷர்மிளா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் இதில் அடங்குவார்கள். நான்காம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.