``ஈபிஎஸ்-க்கு வந்த நோய்.. மருந்தே இல்லை’’ - பகீர் கிளப்பிய RSB அறிக்கை

x

தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்த பட்டியலை பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின் சிறு சிகிச்சை எடுத்தாலும் அது குறித்த அறிக்கையை வெளியிடுவதாக கூறியிருக்கும் ஆர்.எஸ். பாரதி, 75 நாட்கள் அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஒரு போட்டோவை கூட வெளியிடாதவர்கள், முதலமைச்சரின் உடல்நிலையை பற்றி பேச அருகதை இருக்கிறதா? என கேள்வி எழுப்பி உள்ளார். தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களின் பட்டியலை பார்த்து வயிற்றெரிச்சல்படும் பழனிசாமி, அதை திசைதிருப்ப ஏதேதோ பேசுகிறார், எடப்பாடி பழனிசாமிக்கு வந்திருக்கும் பொறாமை நோய்க்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் ஆர்.எஸ். பாரதி விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்