குற்றம் சாட்டிய ஈபிஎஸ்.. மறுத்த அரசு

x

விலையில்லா வேட்டி, சேலை, பள்ளிச் சீருடைகள் பற்றிய எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை திமுக அரசு மறுத்துள்ளது.

விலையில்லா வேட்டி, சேலை மற்றும் மாணவர்களுக்கான 4 செட் விலையில்லா பள்ளி சீருடைகள் வழங்கும் திட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

இதற்கு மறுப்பறிக்கை வெளியிட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, சீருடைகள் தைக்கும் பணிகள் சமூக நலத்துறையால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறையால் மாணவ மாணவியர்களுக்கு முதல் இரண்டு செட் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மூன்றாவது இணை சீருடை துணி உற்பத்தி முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது எனவும் நான்காவது இணை சீருடை உற்பத்தி முடிவடையும் தருவாயில் உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்