"அங்க எப்படிங்க வந்துச்சு" - அதிர்ச்சியில் கேட்ட ஈபிஎஸ்
போதைப்பொருள் ஒழிப்பில் தமிழக அரசு செயலற்ற அரசாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கிளாம்பாக்கம் மற்றும் ரெட்ஹில்ஸ் பகுதியில் 70 கோடி ரூபாய் மதிப்பில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். எதிர்கால சந்ததியினரை சீரழிக்கும் போதைப் பொருட்களின் புழக்கத்தை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Next Story