திமுக MLA மகன், மருமகள் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு

x

வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவுக்காக ஆகஸ்ட் 9ம் தேதி நேரில் ஆஜராகும்படி, திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் ஆகிய இருவரும் தன்னை துன்புறுத்தியதாக அவர்கள் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளில், வழக்கு பதிவு செய்த போலீசார் ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரின் மனைவி மெர்லின் ஆகியோருக்கு எதிராக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நகல்களும் வழங்கப்பட்டன.

இதையொட்டி குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி நேரில் ஆஜராகும்படி, இருவருக்கும் உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை ஆகஸ்ட் 9ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்