"அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்" - திமுக அதிரடி ஆக்ஷன்
அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்" - திமுக அதிரடி ஆக்ஷன்
காஞ்சிபுரம் மேயர் ஆதரவாளர்கள் இருவர், தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்-க்கு எதிராக திமுக மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர்கள் 35 பேர், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கட்சித்தலைமை உத்தரவின்பேரில், திமுக அமைப்பு துணை செயலாளர் அன்பகம் கலை, பேச்சுவார்த்தை நடத்தினார். மேயரின் தீவிர ஆதரவாளர்களாக உள்ள காஞ்சிபுரம் மாநகர மாவட்ட பிரதிநிதி எஸ்.பி பிரகாஷ் மற்றும் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் கே.ஆர். டில்லி குமார் ஆகியோர் மீது எதிர்ப்பு கவுன்சிலர்கள் சரமாரி புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியைச் சேர்ந்த மாவட்ட பிரதிநிதி எஸ்.வி. பிரகாஷ் மற்றும் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் கே.ஆர் டில்லி குமார், ஆகியோர், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.