75,000 பேர்... செப்.17 தலைநகர் சென்னையில் பிரமாண்டம்
திமுக முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பெரியார், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுகவின் தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்படும் நிலையில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் எ.வ.வேலு , மா.சுப்பிரமணியன் பார்வையிட்டனர். 75 ஆயிரம் இருக்கைகளுடன் பிரம்மாண்ட அரங்கம் அமைய உள்ளதாக அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.
Next Story