திமுக கூட்டம் - அமைச்சர் அறிவிப்பு
திமுகவின் வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் திருவண்ணாமலையில் வரும் 22ஆம் தேதி நடைபெறும் என, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்ற உள்ளதாக கூறியுள்ளார். வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்ட கழகச் செயலாளர்கள், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட்டி, பயிற்சி கூட்டத்தின் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அனைவரையும் தவறாமல் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story