நகைச்சுவையாக பேசிய அமைச்சர்.. குலுங்கி குலுங்கி சிரித்த பெண்கள்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தின் போது, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பெண்களிடம் நகைச்சுவையாக பேசினார். திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் இருந்த பெண்களை நோக்கி பேசிய அமைச்சர், அவர்கள் இளவட்டமாக இருந்த போது தானும் இளமையாக இருந்ததாகவும், தற்போது தனக்கும் வயதாகி விட்டதாகவும் கூறினார்.
Next Story