"ரூ.1000 கோடியில்.." திமுக வெளியிட்ட அறிக்கை | DMK | CM Stalin

x

"ரூ.1000 கோடியில்.." திமுக வெளியிட்ட அறிக்கை | DMK | CM Stalin

#ElectionCommission #LokSabhaElections2024 #DMK #CMStalin #ElectionWithThanthiTV

ஆதி திராவிட பழங்குடியினருக்காக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக தி.மு.க. அறிக்கை வெளியிட்டுள்ளது.

Vovt

ஆதி திராவிட பழங்குடியின மக்களுக்காக, முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து, திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதிதிராவிட பழங்குடியினர் தொழில் முனைவு திட்டத்தின்கீழ், 225 பயனாளிகளுக்கு 10 கோடியே 65 லட்சம் ரூபாய் வங்கிக் கடனுடன், 5 கோடியே 80 லட்சம் ரூபாய் மானியத் தொகை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் தான், ஆதிதிராவிட பழங்குடியின சமுதாய இளைஞர்கள் எல்லா இடங்களிலும், எல்லோருக்கும் இணையாக வீற்றிருந்து சிறந்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்