கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆ.ராசா
திமுக சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஆ. ராசா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பாளர் ராசாவுடன் சுற்றுலா ணதுறை அமைச்சர் ராமசந்திரன் உடனிருந்தார்.
முன்னதாக உதகையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி புகைப்படத்திற்க்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
பின்னர் திமுக தலை அலுவலகத்தில் இருந்து திறந்த வாகனத்தில் ஊர்வலமாக வருகை புரிந்தார்.
மாவட்ட தேர்தல் அதிகாரியான அருணா அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
Next Story