"பதவி விலக வேண்டும்" - கொந்தளித்து பேசிய அன்புமணி
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் நிகழ்ந்த பத்து நாட்களிலேயே, டி.குமாரமங்கலத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் உயிரிழந்திருப்பது வேதனையை அதிகரிக்கச் செய்கிறது என தெரிவித்துள்ளார். மேலும், கள்ளச்சாராய விற்பனையை தமிழக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என குற்றம்சாட்டி உள்ள அன்புமணி, கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
Next Story