திமுக பவள விழா.. நுழைவாயிலில் இருந்த புகைப்படங்கள்

x

காஞ்சிபுரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் படங்களுடன் பவளவிழா நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வின் பவளவிழா நாளை காஞ்சியில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்துடன், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான, கி.வீரமணி, செல்வப்பெருந்தகை, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், கமல்ஹாசன் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதே போன்று, வேல்முருகன், ஈஸ்வரன், காதர்மொய்தீன், ஸ்ரீதர் வாண்டையார், எர்ணாவூர் நாராயணன், தமீமுன் அன்சாரி, கருணாஸ் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்