விஜயபிரபாகரன் தொடர்ந்த வழக்கு - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாக்கூர் வெற்றி பெற்றதை எதிர்த்து தே.மு.தி.க வேட்பாளர் விஜயபிரபாகரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில், மாணிக்கம் தாக்கூர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணிக்கம் தாக்கூர் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி விஜய பிரபாகரன் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மனு மீது பதிலளிக்க மாணிக்கம் தாக்கூர் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்