"வெளிநாடுகள் போல் இந்தியாவில் இல்லை.. வானிலை முன்னறிவிப்பில் ஏமாற்றம்.." - அமைச்சர் ஆதங்கம்
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் மிகவும் துல்லியமான, சரியான நேரத்தில் முன்னறிவிப்புகள் இல்லை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வானிலை எச்சரிக்கைகளில் நேர வேறுபாடு இருந்தது, குறிப்பிடத்தக்க பிரச்சினை என்று கூறியுள்ளார். ரெட் அலர்ட் மற்றும் உண்மையான வெள்ளப்பெருக்கிற்கு இடையே உள்ள நேர இடைவெளி, மேற்கத்திய நாடுகளில் காட்டப்படுவதை விட மிக குறைவாகவே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பேரழிவுகளை முன்னறிவிப்பதற்கும், விளைவுகளைக் குறைப்பதற்கும் சிறப்பாகத் தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ள அமைச்சர், இது கூட்டுப் பொறுப்பு மற்றும் செயலுக்கான நேரம் என தெரிவித்துள்ளார்.
Next Story