"விவசாயிகளுக்கு பக்கபலமாக நிற்பேன்.." - அடித்து பேசிய முகமது முபராக்
திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தியத்தில் வளம் தரும் விவசாய நிலத்தில் தான் சிப்காட் அமைக்க வேண்டுமா? என எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபராக் கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தியம், மஞ்ச நாயக்கன் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பழனி மலைக் கோவிலுக்கு சொந்தமான 220 ஏக்கர் நிலத்துடன் சேர்த்து சுமார் 920 ஏக்கர் பரப்பளவில் கள்ளிமந்தயத்தில் வளம் தரும் விவசாய நிலத்தை மாற்றி சிப்காட் கொண்டுவர ஆளுங்கட்சியினர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
Next Story