"துணை முதல்வர் பதவி என்பது".. - உச்சநீதிமன்றம் சொன்ன கருத்து

x

துணை முதல்வர்கள் நியமனம் என்பது அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது அல்ல என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. துணை முதல்வர்கள் நியமனம் அரசியலமைப்பு சாசனத்தின் 14வது பிரிவுக்கு எதிரானது என தெரிவித்து, இது போன்ற துணை முதல்வர்கள் நியமனங்களைத் தடுக்க உத்தரவிடக் கோரி பப்ளிக் பொலிட்டிக்கல் பார்ட்டி என்ற அமைப்பு பொதுநல மனு தாக்கல் செய்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், துணை முதல்வர் பதவி என்பது அடையாளம் மட்டுமே, அந்த அடையாளம் துணை முதல்வருக்கு அதிக அளவிலான ஊதியத்தைத் தருவதில்லை என கூறி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்