"ஜனநாயகம்" என்று விசிக தலைவர் திருமாவளவன் ஒரு வார்த்தையில் ட்வீட்
ஒரு சொல்லில் ட்விட் செய்வது ட்ரெண்டாகி வரும் நிலையில், ஜனநாயகம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பதிவிட்டுள்ளார். ட்விட்டர் பக்கத்தில், அரசியல் தலைவர்கள், தனிநபர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் ஒற்றை சொல்லில் பதிவிட்டு வருகின்றனர். திராவிடம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழன் என்று பாஜக தலைவர் அண்ணாமலையும், தமிழ் தேசியம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒற்றை சொல்லில் ட்விட் செய்துள்ளனர். இந்த வரிசையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஜனநாயகம் என்று ஒரு சொல்லில் ட்விட் செய்துள்ளார்.
Next Story