"CM இருக்கும் போதே பெண் MP மீது தாக்குதல்..கெஜ்ரிவால் நிச்சயம்.." - நிர்மலா சீதாராமன் ஆவேசம்
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கெஜ்ரிவால் வீட்டில் அமர்ந்திருக்கும் போதே, ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். இந்த விவகாரம் குறித்து இதுவரை கெஜ்ரிவால் எந்த விளக்கமும் அளிக்காமல் மவுனம் காப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நிர்மலா சீதாராமன், அரவிந்த் கெஜ்ரிவால், மாநில பெண்களுக்கு எப்படி பாதுகாப்பை வழங்குவார் எனக் கேட்டார். ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் நாட்டு மக்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
Next Story